சங்கத்தின் விதிகள்‌

அனைத்து உறுப்பினர்கள்‌ / குடியிருப்புதாரர்கள்‌ மற்றும்‌ அவர்களுக்கு பின்‌ வரும்‌ வாரிசுகள்‌ சங்கத்தின்‌ பின்வரும்‌ விதிகளுக்கு கட்டுப்பட வேண்டும்‌.

உறுப்பினர்கள்‌ மற்றும்‌ குடியிருப்பாளர்கள்‌ சங்கத்தின்‌ நிர்வாகிகளை மரியாதையுடன்‌ நடத்துமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌. அலுவலகப்‌ பொறுப்பாளர்கள் உறுப்பினர்களுக்கும்‌ குடியிருப்பாளரின்‌ நலனுக்கும்‌ தமது திறமைக்கேற்ப சேவையாற்றும்‌ ஈடுபாட்டு உணர்வுடன்‌ பொறுப்புக்களை ஏற்றுக்‌ கொண்டுள்ளனர்‌, மேலும்‌ அவர்கள் உறுப்பினர்களின்‌ பணியாளர்களாக கருதப்படக்கூடாது.

  1. அனைத்து உறுப்பினர்களும்‌ மாதாந்திர பராமரிப்புக்‌ கட்டணங்கள்‌ உட்பட அனைத்து நிலுவைகளையும்‌ சங்கத்திற்கு தவறாமால்‌ செலுத்துதல்‌ வேண்டும்‌ என்பதுடன்‌, இந்ததுணை விதிகளின்‌ படி அனைத்து நடவடிக்கைகளையும்‌ முன்னெடுத்தல்‌ வேண்டும்‌. சங்கத்திற்கு பராமரிப்புக்‌ கட்டணம்‌ செலுத்தப்படமால்‌ இருந்தால்‌ குடியிருப்போர்‌ நலச்சங்கம்‌ உரிய நடவடிக்கை மற்றும்‌ சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும்‌.
  2. எந்த குப்பையையும்‌ / தேவை இல்லாத பொருளையும்‌ திறந்த வெளியில்‌ நேரடியாக விசக்கூடாது.
  3. தீப்பெட்டிகள்‌, சிகரெட்‌ துண்டுகள்‌, போன்ற எரியும்‌ பொருட்களை நேரடியாக திறந்த வெளிப்பகுதிகளில்‌, மின்தூக்கிகளில்‌ அல்லது பால்கனிகள்‌ / தாழ்வாரங்களில்‌ இருந்து எந்த திறந்த பகுதிகளிலும்‌ எறியக்கூடாது.
  4. செயற்குழுவினால்‌ அதிகாரமளிக்கப்பட்ட மின்தூக்கிகளிலோ அல்லது விளம்பரம்‌ தவிர்க்கப்பட வேண்டிய இடங்களிலோ எந்தவகையான விளம்பரங்களோ அல்லது சுவரொட்டிகளோ ஒட்டப்படுதல்‌ ஆகாது.
  5. அடுக்குமாடிக்‌ குடியிருப்புகளைக்‌ கழுவுதல்‌, செடிகளுக்குத்‌ தண்ணீர்‌ ஊற்றுதல்‌ போன்றவற்றின்‌ போது, பால்கனிகளில்‌ இருந்து தண்ணீர்‌ வெளியேறாமல்‌ பார்த்துக்‌ கொள்ள வேண்டும்‌. இதன்மூலம்‌ கீழ்த்தளங்களில்‌ வசிப்பவர்கள்‌, கீழே உள்ள சாலையில்‌ நடந்து செல்பவர்கள்‌, நிறுத்தப்பட்டிருக்கும்‌ வாகனங்கள்‌ மற்றும்‌ கட்டிடத்தின்‌ வெளிப்புற மேற்பரப்பு ஆகியவை பாதிக்கப்பபடாமல்‌ பார்த்து கொள்ள வேண்டும்‌.
  6. ஜன்னல்கள்‌, பால்கனிகள்‌ அல்லது தாழ்வாரங்களின்‌ கைப்பிடிச்‌ சுவர்களில்‌ துணிகளை உலர்த்துவது அல்லது தொங்கவிடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
  7. தாழ்வாரங்கள்‌ / பொதுவானபகுதிகள்‌ / மின்தூக்கிகள்‌ போன்றவற்றில்‌ புகைபிடித்தல்‌, பான்‌ பாக்கு துப்புதல்‌ ஆகியவை கண்‌டிப்பாகத்‌ தடைசெய்யப்பட்டுள்ளன.
  8. மின்தூக்கிகளில்‌ அதிகபாரம்‌ ஏற்றக்கூடாது. கனமான மற்றும்‌ பெரிதாக்கப்பட்ட பொருட்களை மின்தூக்கிகளில்‌ எடுத்துச்‌ செல்லக்கூடாது, மேலும்‌ மின்தூக்கிகள்‌ குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும்‌.
  9. குடியிருப்பாளர்கள்‌ சத்தம்‌ எழுப்புவதிலோ அல்லது இசைக்கருவிகள்‌, ரேடியோக்கள்‌, தொலைக்காட்சிகள்‌ மற்றும்‌ ஒலிபெருக்கிகளைப்‌ பயன்படுத்துவதிலோ மிகுந்த கவனம்‌ செலுத்தி மற்றவர்களை தொந்தரவு செய்யாமல்‌ இருக்கவேண்டும்‌.
  10. சுவர்‌, இரும்புவேலி அல்லது தடுப்பு போன்ற தற்காலிகமானஅல்லது நிரந்தரமான எந்தவொரு கட்டமைப்பும்‌ எந்தவொரு உறுப்பினராலும்‌ / குடியிருப்பாளர்களாலும் பொதுவான பகுதிகளில்‌ அமைக்கப்படுதல்‌ ஆகாது. |
  11. குடியிருப்புகளின்‌ மொட்டைமாடி / மேற்‌ ௯ரை, குழந்தைகள் உட்பட அனைத்து குடியிருப்பாளர்களின்‌ எல்லைக்கு அப்பாற்பட்டது. அலுவலர்கள்‌ அடங்கிய பராமரிப்புக்குழு கலந்தாலேசனைப்படி செயற்குழுவினால்‌ அனுமதிக்கபட்ட தொழில்நுட்ப பணியாளர்களுக்கு மட்டும்‌ பராமரிப்பு தொடர்பான வேலைகள்‌ அல்லது அத்தகைய பிற செயற்பாடுகளுக்காக சங்கத்தின்‌ அனுமதி வழங்கப்பபடுகிறது.
  12. பால்கனி பகுதிகளில்‌ உலர்த்துவதற்காகத்‌ தொங்கவிடப்பட்ட ஆடைகள்‌, விரிப்புகள்‌ துணிகள்‌ முதலியன கட்டிடத்திற்கு வெளியேயோ அல்லது பால்கனியின்‌ கைப்பிடி சுவரிலோ தொங்கிக்கொண்டிருக்கக்க௯டாது. பூந்தொட்டிகள்‌ மற்றும்‌ பிறபொருட்களை பால்கனி ௯ரைலிருந்து தொங்கவிடவோ அல்லது கைப்பிடி சுவர்களில்‌ வைக்கவோ கூடாது.
  13. எந்தவொரு உறுப்பினரும்‌ / குடியிருப்புதாரரும்‌ அல்லது அவர்களின்‌ பிரதிநிதியும்‌ நேரடியாகத்‌ தலையிட்டு பராமரிப்பு பணிஊழியர்கள்‌, உறுப்பினர்கள்‌, ஒப்பந்ததாரர்கள்‌, பாதுகாப்பு பணியாளர்கள்‌ உட்பட எவரையும்‌ தனிப்பட்ட நோக்கங்களுக்காகப்‌ பயன்படுத்தவோ பரிந்துரைக்கவோ கூடாது. எனினும்‌ அவர்கள்‌ தமது சொந்தக்‌ குடியிருப்புகளில்‌ பிளம்பிங்‌, மின்சாரம்‌, மற்றும்‌ ஏணைய பராமரிப்புப்‌ பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சேவைகளை சங்கத்தின்‌ மூலம்‌ கோரலாம்‌.
  14. ஒரு குடியிருப்பில் / பிளாட்டில்‌ கசிவு ஏற்பட்டால்‌ அதனால்‌ கீழே ஒரு குடியிருப்பு பாதித்தால்‌. பாதிக்கப்பட்ட தரப்பினர்‌ கசிவு ஏற்பட்ட குடியிருப்பின்‌ உரிமையாளருக்கு இது குறித்து அறிக்கை மூலம்‌ தெரிவிக்க வேண்டும்‌. பழுது பார்ப்பு, மறுசீரமைப்புக்கான செலவு கசிவு உருவாகும்‌ குடியிருப்பின்‌ உரிமையாளரால்‌ ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்‌. மேலும்‌ அத்தகைய பழுதுபார்ப்புகள்‌ விரைவில்‌ முடிக்கப்பட வேண்டும்‌ அல்லது 30 நாட்களுக்கு மிகாமல்‌ இருக்குமாறு செயல்பட வேண்டும்‌. பொதுவான பகுதிகளில்‌ உருவாகும்‌ கசிவு மற்றும்‌ எந்தவொரு குடியிருப்பிலும்‌ கசிவு உருவாகாமல்‌ சரிசெய்வது சங்கத்தின்‌ பொறுப்பாகும்‌.