TNUHDB118
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் - 118 அடுக்குமாடி குடியிருப்போர் நலச் சங்கம்

பிளாக் - 118, க.எண்: 96, எழில் நகர், பெரும்பாக்கம் - 600 100

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் - 118 அடுக்குமாடி குடியிருப்போர் நலச் சங்கம்

பிளாக் - 118, க.எண்: 96, எழில் நகர், பெரும்பாக்கம் - 600 100


📢 சங்க அறிவிப்பு

கிரயப் பத்திர விண்ணப்பத்திற்கு தேவையான முக்கிய தகவல்கள் கீழே வழங்கப்படுகின்றன.

📜 கிரயப் பத்திர விண்ணப்ப அறிவிப்பு

கிரயப் பத்திரத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், நமது ப்ளாக் நிர்வாக அலுவலகத்தில் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம்.

📌 தேவையான ஆவணங்கள்

  1. அலாட்மெண்ட் நகல்
  2. அலாட்மெண்டில் உள்ள கணவர் & மனைவி இருவரின் ஆதார் நகல்
  3. அலாட்மெண்டில் உள்ள கணவர் & மனைவி இருவரின் ஓட்டர் ஐடி நகல்
  4. இந்த ஆண்டின் வீட்டு வரி ரசீது நகல்
  5. மின் அட்டை (EB Card) நகல்
  6. சமீபத்திய கேஸ் ரசீது நகல்
  7. குடும்ப அட்டை நகல்
  8. ரூ.100 மதிப்பிலான பத்திரம் காலியாக இருக்க வேண்டும் (அலாட்மெண்டில் உள்ளவரின் ஆதார் அட்டை கொடுத்து வாங்க வேண்டும்)
  9. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்குச் செலுத்த வேண்டிய மாதாந்திர பராமரிப்பு கட்டணத்தை, நீங்கள் எந்த மாதம் விண்ணப்பிக்கப் போகிறீர்களோ அந்த மாதம் வரை கட்டி இருக்க வேண்டும். (நடப்பு மாதத்தில் கட்டிய ரசீது இருக்க வேண்டும்) அந்த புத்தகத்தின் நகல் (அ) அனைத்து ரசீதுகளின் நகல்
  10. அலாட்மெண்டில் உள்ள கணவர் மனைவி இருவரும் வீட்டின் கதவு முன் நின்று, கதவு திறந்து இருப்பதுபோல எடுக்கப்பட்ட புகைப்படம் (A4 அளவில் ஒன்று, விசிட்டிங் கார்டு அளவில் 2, அலாட்மெண்டில் முதலில் இருப்பவரின் பாஸ்போட் அளவிலான புகைப்படம் 1)
  11. ஒதுக்கீட்டுத்தாரர் வாரிசாக இருந்தால், இறப்பு அல்லது வாரிசு சான்றிதழ்
  12. குடும்ப அட்டையில் உள்ள அனைவரது ஆதார் நகல்

🏠 முகவரி மாற்றம் தொடர்பான தகவல்

ப்ளாக் முகவரிக்கு தங்களின் ஆவணங்களை மாற்ற விரும்புவோர் கீழ் உள்ள முகவரியைப் பயன்படுத்தி மாற்றிக் கொள்ளலாம்!

தமிழ்:

ப்ளாக் எண்: 118,
தளம்: கதவு எண்:
எழில் நகர்,
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்,
பெரும்பாக்கம், செங்கல்பட்டு,
சென்னை – 600100

English:

Block No: 118,
Floor: Door No:
Tamil Nadu Urban Habitat Development Board (or) (TNUHDB),
Ezhil Nagar, Perumbakkam,
Chengalpattu,
Chennai, Tamil Nadu, India – 600 100

💰 மாதாந்திர சந்தா தொகை தொடர்பான அறிவிப்பு

பிளாக்கிற்கு செலுத்த வேண்டிய சந்தா தொகை ரூ.50 ஐ பிரதிமாதம் 10 – ம் தேதிக்குள் கட்டாயம் செலுத்திட வேண்டும். அதிகபட்சம் 3 மாதங்கள் சந்தா தொகை செலுத்தபடாமல் இருந்தால் பிளாக் நிர்வாக குழுவால் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும்.

⚠️ குறிப்பு: அனைத்து ஆவணங்களும் தெளிவாகவும், முழுமையாகவும் இருக்க வேண்டும்.