ப்ளாக் விதிமுறைகள்

  1. TNUHDB-க்கு மாதம் மாதம் கட்ட வேண்டிய பராமரிப்பு தொகையான ரூ.750-ஐ குறிப்பிட்ட தேதியில், அரசு அலுவலகத்தில் செலுத்திட வேண்டும். (பிரதி மாதம் 10ம் தேதிக்குள்).
  2. ப்ளாக் பொறுப்பாளர், ப்ளாக் நிர்வாகிகள் மற்றும் தற்காலிக தலைவர் எடுக்கும் பொது விஷயங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். (அதில் கருத்துச் சொல்ல வீட்டின் உரிமையாளர்களுக்கு முழு உரிமை உண்டு. பெரும்பான்மையான கருத்துக்கு முன்னுரிமை வழங்கப்படும், அதுவும் அரசு விதிகளுக்கு உட்பட்டு).
  3. வீட்டின் உரிமையாளர்கள், தங்களின் வீட்டிற்குக் குடிவரும் முன், ஒவ்வொரு வீட்டிற்கும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள ரூ.2,500/- கட்டாயம் செலுத்திருக்க வேண்டும். (இந்த தொகையில் தான் பாதுகாப்பு வசதிகளான சிசிடிவி, பொது மின் விளக்குகள் அமைக்கப்படும். மேலும், பொதுநலன் கருதி கூடுதலாக நன்கொடை வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறது).
  4. வீட்டின் முகப்பைச் சுத்தமாக வைத்திருப்பதை ஒவ்வொரு வீட்டில் குடியிருப்போரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். வீட்டின் வாசல் பகுதியில் தண்ணீர் கேன் (ட்ரம்) உள்ளிட்ட பொருட்களைக் கட்டாயம் வைக்கக் கூடாது. அதிகபட்சம் செருப்பு ஸ்டேண்ட், துணி காயவைக்கும் ஸ்டேண்ட் வைக்க மட்டுமே அனுமதி. இதற்கு அனைவரும் கட்டாயம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
  5. ஆடைகளை துவைத்துக் காய வைக்க, தங்களது வீட்டின் பக்கவாட்டில் கயிறு கட்டி காயபோடலாம். எக்காரணம் கொண்டும் எதிர் வீடு உள்ள திசையில் கயிறு கட்டி ஆடைகளை காய வைக்க அனுமதி இல்லை. அதேபோல படிக்கட்டுகளின் பக்கவாட்டில் கயிறு கட்டவும் அனுமதி இல்லை.
  6. புகையிலை, குட்கா, மதுபானம் போன்ற தடை செய்யப்பட்டவைகளை ப்ளாக் தொடர்புடைய பொது இடங்களில், புகைத்தோ, ருசித்தோ அதன் கழிவுகளைப் போடக் கூடாது. ஒவ்வொரு ப்ளாகிலும் குழந்தைகள் உள்ளனர் என்பதனை கருத்தில் கொள்ள வேண்டும்.
  7. எவ்வகையான வாகனங்களையும் ப்ளாக் உள்ளே நிறுத்த அனுமதி இல்லை.
  8. பிளாக் உள்ளே எவ்வகையான கடைகள் வைக்கவும் அனுமதி இல்லை. மீறினால் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்க பிளாக் சார்பில் பரிந்துரைக்கப்படும்.
  9. குடியிருப்போரின் உறவினர்களைத் தவிர வேறு யாரும் உள்ளே வர அனுமதி இல்லை. அப்படி உள்ளே வரும் நபர்கள் ஏதேனும் அசம்பாவிதங்களில் ஈடுபட்டால், அதற்குப் பதில் சொல்ல வேண்டிய முழு பொறுப்பு குறிப்பிட்ட வீட்டின் உரிமையாளர் / வாடகைதாரருக்கு உள்ளது என்பதனை கருத்தில் கொள்ள வேண்டும்.
  10. ப்ளாக் சுற்றி உள்ள பகுதிகளில் எக்காரணம் கொண்டும், எவ்வகையான குப்பைகளைக் கொட்டவும் அனுமதி இல்லை. அருகில் உள்ள குப்பைத் தொட்டியில் மட்டுமே குப்பைகளைக் கொட்ட வேண்டும். (வீடுகளை மறு சீரமைப்பு செய்வோர் கட்டாயம் செங்கல், சிமெண்ட் உள்ளிட்ட கழிவுப் பொருட்களை ப்ளாக்கை சுற்றிக் கொட்டக் கூடாது).
  11. பிளாக்கிற்கு செலுத்த வேண்டிய சந்தா தொகை ரூ.50 ஐ பிரதிமாதம் 10 – ம் தேதிக்குள் கட்டாயம் செலுத்திட வேண்டும். அதிகபட்சம் 3 மாதங்கள் சந்தா தொகை செலுத்தபடாமல் இருந்தால் பிளாக் நிர்வாக குழுவால் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும்.
  12. நமது ப்ளாக் முன் உள்ள மின்மாற்றிக்கு எதிரே உள்ள பகுதியை, மாற்றுத் திறனாளிகள் அவர்களது மூன்று சக்கர வாகனங்களை நிறுத்தும் வகையில் வேறு யாரும் வாகனங்களை நிறுத்தாமல் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
  13. ப்ளாக் வலது மற்றும் இடப்புற பக்கவாட்டு பகுதியில் தங்களது ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களை வரிசையாக நிறுத்தி கொள்ளலாம். மாற்று ப்ளாகை சார்ந்த வாகனங்கள் நிறுத்துவதை அனுமதிக்கக் கூடாது.
  14. ப்ளாக்கிற்கு வரும் தண்ணீர், மின்சாரம், தூய்மை பணி உள்ளிட்ட பிரச்சனைகள் இருப்பின் தற்காலிக ஒருங்கிணைப்புக் குழு வழியாகவோ, நேரடியாகவோ தெரிவிக்கலாம். (எண்: 9677182052 - கோடீஸ்வரன்) / (மீனா - 8682903024). தனிப்பட்ட வகையில் வீட்டிற்கு தண்ணீர் வரவில்லை எனில், தனியாக ப்ளம்பர் வைத்துச் சரிபார்த்துக் கொள்ளலாம்.
  15. வீட்டின் உரிமையாளர் கட்டாயம் தங்களது வாட்ஸ் அப் எண்ணைத் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் குழுவில் தங்களை இணைக்கப்படும் - முக்கியத் தகவல்களை உடனுக்குடன் பகிர முடியும்.
  16. வீட்டின் உரிமையாளர்கள் தங்களது வீட்டை வாடகைக்கு விடுவதாக இருந்தால், ப்ளாக் பொறுப்பாளர், ப்ளாக் நிர்வாகிகள் மற்றும் தற்காலிக ஒருங்கிணைப்புக் குழுவிடம் யாருக்கு வாடகைக்கு விடுகிறோம் என்பதனை தெரிவித்து அறிமுகப்படுத்த வேண்டும். (வாடகைக்கு வருவோர் ப்ளாக் விதிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதை, வீட்டின் உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்).
  17. மதம், ஜாதி தொடர்புடைய எந்த ஒரு தினசரி, வாராந்திர நிகழ்வுகளையும் ப்ளாக் (பொது இடத்தில்) உள்ளே நடத்த / பரப்புரை செய்ய அனுமதி இல்லை. (கடவுள் நம்பிக்கை அவர் அவர் தனிப்பட்ட விருப்பம், அவர் அவர் வீடுகளில் தனிப்பட்ட வகையில் தொடர்வதில் எவ்வித சிக்கலும் இல்லை).
  18. பிறந்த நாள், திருமணம் போன்ற விழாக்களை நடத்தினால், நிகழ்வு முடிந்தபின் அந்த இடங்களைச் சுத்தம் செய்ய வேண்டியது அந்த நிகழ்வின் உரிமையாளரின் கடமை என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்
  19. ப்ளாக் தொடர்பான தேவைகள் மற்றும் புகார்களை TNUHDBக்கு தெரிவிக்கச் செல்லும்போது அல்லது அதற்கான முன்னெடுப்பு எடுக்கும்போது அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
  20. நமது ப்ளாக் தொடர்பான பொது இடத்தை (வெளியில்) யாரேனும் கடை உள்ளிட்டவற்றை வைக்க முற்பட்டால், அதனை உடனடியாக தடுக்க முனைப்புக் காட்ட வேண்டும். போதிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும். காலை 6 மணிக்கு முன், இரவு 10 மணிக்குப் பின் ப்ளாக்-ஐ விட்டு வெளியில் சென்றாலோ, உள்ளே வந்தாலோ பூட்டு கொண்டு பூட்டிவிட்டு வர வேண்டும்.
  21. பிளாக் மெயின் கேட்டின் பூட்டு ஏதேனும் காரணங்களால் பழுதடைந்தால், பிளாக் நிர்வாகத்தால் பூட்டு மாற்றப்படும் பட்சத்தில் அதற்க்கான சாவியை அனைவரும் தாங்களாகவே போட்டுக்கொள்ள வேண்டும் அதற்க்கான மாதிரி சாவியை நிர்வாகத்திடமோ/ தலைவரிடமோ பெற்றுக்கொள்ளலாம்.
  22. தரைதளத்தின் அறிவிப்பு பலகை அருகில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் தாங்கள் நேரடியாக தெரிவிக்க தயங்கும் புகார்களை தயக்கமின்றி தெரிவிக்கலாம். தங்களின் கடிதங்கள் ரகசியம் காக்கப்படும்.
  23. பிளாக் வாட்ஸ் ஆப் குழுவில் தேவையற்ற Forward செய்திகளை தொடர்ந்து பகிர்ந்தால் அவர்கள் பிளாக் குழுவில் இருந்து நீக்கப்படுவார்கள்.
  24. பிளாக் பொது தளங்கள் மற்றும் பிளாக் சுற்றி அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகளை பகலில் ஒளிரவிடாமல் இருக்க வேண்டும். (மழை மற்றும் பேரிடர் காலங்களில் விதிவிளக்கு).
  25. லிப்ட் ஆபரேட்டர் மற்றும் பிளாக் பராமரிப்பு ஒப்பந்ததாரர்களுக்கு தேவையான முழு ஒத்துழைப்பையும் அனைத்து குடும்பத்தை சார்ந்தவர்களும் வழங்க வேண்டும் (தூய்மை பணியாளர்கள் உட்பட அனைவருக்கும்) லிப்ட் ஆப்ரேட்டர் மறுக்கும் பொருட்களை கட்டாயம் எடுத்து செல்ல அனுமதி இல்லை (லிப்ட் ஆப்ரேட்டர் மீது புகார் இருந்தால் கட்டாயம் நிர்வாகத்தில் தெரிவிக்க வேண்டும். தனிப்பட்ட வகையில் அவரிடம் முறையிடவோ அல்லது வாக்குவாதத்தில் ஈடுபடவோ கூடாது).