பயோமெட்ரிக் விதிமுறைகள்

  1. ப்ளாக்-ல் வசிப்பவர்களுக்கு மட்டுமே பயோமெட்ரிக் பதிவு செய்யப்படும்.
  2. குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கைரேகை பதிவு கட்டாயம்.
  3. கைரேகை பதிவு செய்ய, ஆதார் நகலை அடையாளச் சான்றாக வழங்க வேண்டும்.
  4. ஒரு குடும்பத்திற்கு 2 Access Card-கள் இலவசமாக வழங்கப்படும். கூடுதல் Access Card வேண்டுமானால் தலா ரூ.100/- செலுத்த வேண்டும்.
  5. Access Card சேதமடைந்தால் ரூ.50 செலுத்தி மாற்றிக்கொள்ளலாம்.
  6. Access Card தவறுதலாகத் தொலைந்துவிட்டால், உடனடியாக ப்ளாக் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து அட்டையை முடக்க வேண்டும்.
  7. தொலைந்த Access Card-க்கு ரூ.250 அபராதம் செலுத்தி, புதிய அட்டையை பெற்றுக்கொள்ளலாம்.
  8. ஒருவருக்கு வழங்கப்படும் Access Card-ஐ அவர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். வெளி நபர்கள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் அந்த அட்டை முடக்கப்படும்.
  9. கைரேகை அல்லது Access Card-ஐ பயன்படுத்தி உள்ளே வரும்போது / வெளியில் செல்லும்போது கதவை கட்டாயம் மூடிவிட்டுச் செல்ல வேண்டும்.
  10. பயோமெட்ரிக் லாக் அமைப்பு நம் மக்களின் / நம் குடும்பத்தின் பாதுகாப்பிற்கானது என்பதனை உணர்ந்து அதனைப் பொறுப்பாகப் பயன்படுத்த வேண்டும்.