புகைப்படங்கள் 2025
14.01.2025 அன்று சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டது.
11.06.2025 அன்று, லிப்ட் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது
ப்ளாக்-118-ஐ நம் குடியிருப்பு! நம் பொறுப்பு! திட்டத்தில் இணைக்க, 03.09.2025 அன்று பொதுக்குழுக் கூட்டம் கூட்டி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
ப்ளாக் மொட்டை மாடியில் உள்ள 47 குடிநீர்த் தொட்டிகளும் 16.11.2025 அன்று சுத்தம் செய்யப்பட்டது.
ப்ளாக் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ப்ளாக்கிற்கு பயோமெட்ரிக் கேட் அமைக்கப்பட்டது.
ப்ளாக் உள் மற்றும் வெளிப்பகுதியில் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் 16 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டது.
ப்ளாக்-ல் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டால், அதனை எதிர்கொள்ள ஏதுவாக 8 தீ அணைப்பான்கள் பொருத்தப்பட்டது (நன்கொடை: வேலு.சே)
ப்ளாக் சார்பாக அளிக்கப்பட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையில், கோட்டம்-9 நிர்வாகப் பொறியாளர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
மின்சாரம் இல்லாத நேரத்திலும் பையோமெட்ரிக் வாசல், மற்றும் சிசிடிவி கேமரா இயங்கும் வகையில், வைப்பை மற்றும் இன்வெட்டர் வைக்கப்பட்டது.
மின் அறை ஒழுங்குபடுத்தப்பட்டு, தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டது.
ப்ளாக் உள் மற்றும் வெளிப் பகுதிகளில் குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில், 24*7 கண்காணிக்க டிவி பொருத்தப்பட்டது.
ப்ளாக் சுற்றி உள்ள பகுதிகளில் மது அருந்துவதைத் தடுக்கவும், ப்ளாக் சுவர்களில் சுவரொட்டி ஒட்டுவதைத் தடுக்கும் வகையிலும் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது.