நோக்கங்களும்‌ , குறிக்கோள்களும்‌:

  1. தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால்‌ அங்கீகரிக்கப்பட்டு, பொதுக்குழுவால்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட்ட நிலையான இயக்க நடைமுறைகளில்‌ (SOP) உள்ள உட்பிரிவுகளைப்‌ பின்பற்றி குடியிருப்பு பகுதிகளைச்‌ சுத்தமாகவும்‌, நேர்த்தியாகவும்‌ பராமரிக்க வழக்கமான பராமரிப்புப்‌ பணிகளான தூய்மைப்படுத்துதல்‌. திடக்கழிவுகளை அகற்றுதல்‌, மின்தூக்கி இயக்குதல்‌, குடிநீர்வழங்கல்‌, கழிவுநீர்‌ அகற்றுதல்‌, சுகாதாரம்‌, குடிநீர்‌ தொட்டி பராமரிப்பு, பொதுப்பகுதி விளக்குகள்‌ எரிய வைத்தல்‌, வாகன நிறுத்துமிடம்‌ மேம்படுத்துதல்‌ போன்றவற்றை மேற்கொள்ளுதல்‌.
  2. குழாய்கள்‌ பழுது நீக்கம்‌ செய்பவர்‌, நீர்த்‌ தேக்கத்‌ தொட்டி இயக்குபவர்‌, மின்தூக்கி இயக்குபவர்‌, துப்புரவாளர்‌, துப்புரவுப்‌ பணியாளர்கள்‌ போன்ற பராமரிப்புப்‌ பணியாளர்களை நியமித்து பழுதுபார்ப்பு மற்றும்‌ புதுப்பித்தல்களை உரிய நேரத்தில்‌ செய்தல்‌.
  3. குடியிருப்புகளை உரிய காலத்தில்‌ புனரமைத்தல்‌.
  4. பொது சொத்துக்களை, வளங்களைப்‌ பராமரித்தல்‌.
  5. குடியிருப்புகளில்‌ வசிப்பவர்கள்‌ கேட்டுக்கொண்டவாறு சுற்றுச்சுவரை உயர்த்தி அமைத்தல்‌, சிசிடிவி கேமரா பொருத்துதல்‌, கூடுதல்‌ பாதுகாப்பு வாயில்‌ கதவுகள்‌ அமைத்தல். கூடுதல்‌ விளக்குகள்‌ பொருத்துதல்‌ மற்றும்‌ இதர கட்டுமான பணிகள்‌, மின்‌ மற்றும்‌ மின்னணுப்‌ பணிகள்‌ போன்ற கூடுதல்‌ உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கும் வழங்குவதற்கும்‌ தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்கு ஆதரவளித்தல்‌.
  6. தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்துடன்‌ இணைந்து குடிநீர்‌ குழாய்‌ பராமரிப்பு, குடிநீர்வழங்கல்‌, கழிவுநீர்‌ அகற்றுதல்‌, மின்பழுதுபார்த்தல்‌, படிக்கட்டுகள்‌ பராமரிப்பு, மொட்டை மாடிப்‌ பராமரிப்பு போன்ற சிறு பழுதுபார்ப்புப்பணிகளை மேற்கொள்ளுதல்‌.
  7. கட்டமைப்புச்‌ சேதங்கள்‌, விரிசல்கள்‌, ஓவியம்‌ தீட்டுதல்‌, கழிவறை நீர்தொட்டிகள்‌ பழுதுபார்த்தல்‌, மேல்‌௯ரைக்கசிவு, மின்தூக்கிகளை பழுதுபார்த்தல்‌, ஜெனரேட்டர்‌ பழுதுபார்த்தல்‌, வடிகால்‌ பழுதுபார்த்தல்‌ போன்ற முக்கிய பழுது பார்ப்புப்‌ பணிகளை மேற்கொள்வதில்‌ தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்கு ஆதரவளித்தல்‌.
  8. நன்கொடைகள்‌, சந்தாக்கள்‌ மூலம்‌ சங்கத்தின்‌ செயல்பாடுகளுக்கு நிதிதிரட்டி குடியிருப்போர்‌ நலச்சங்கங்களுக்கு (RWA) அதிகாரமளித்தல்‌.
  9. ஆரம்ப சுகாதார நிலையங்கள்‌, அரசுப்பள்ளிகள்‌, நூலகம்‌, அங்கன்வாடி, சமுதாயக்கூடம்‌, பொது விநியோகத்‌ திட்ட கடைகள்‌ போன்ற பொதுப்‌ பயன்பாடுகளை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அருகே உள்ள குடியிருப்போர்‌ நலச்சங்கங்களுடன் கூட்டாக சேர்ந்து கட்டுவதற்கும்‌, தேவைப்படும்‌ பட்சத்தில்‌ புதுப்பிப்பதற்கும்‌ தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்கு ஆதரவளித்தல்‌.
  10. பொது இடத்திற்கான மின்சாரக்‌ கட்டணங்கள்‌ மற்றும்‌ மின்தூக்கிச்‌ செயற்பாடுகள்‌ மற்றும்‌ நீர்‌ வழங்கல்‌ கட்டணங்களைச்‌ செலுத்துவதை உறுதிப்படுத்தல்‌.
  11. சங்க உறுப்பினர்களிடமிருந்து பராமரிப்புக்‌ கட்டணங்களை வதலித்தல்‌ மற்றும்‌ அட்டவணைப்‌ படுத்தப்பட்ட வர்த்தக வங்கிகளில்‌ வங்கிக்கணக்கைத்‌ தொடங்கி சேமித்தல்‌ வைப்பு செய்தல்‌.
  12. சங்க உறுப்பினர்களுக்கும்‌, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்கும்‌ இடையே நெருக்கமான ஒத்துழைப்பை ஊளக்குவிப்பதன்‌ மூலம்‌ அடுக்குமாடிக்‌ குடியிருப்புகளில்‌ அமைதியான வாழ்க்கையை வழங்கி சங்க உறுப்பினர்களின்‌ நலனைக் கவனித்துக்‌ கொள்ளுதல்‌ மற்றும்‌ துடிப்பான குடியிருப்போர்‌ நலச்‌ சங்கத்தை உருவாக்குதல்‌.
  13. சங்க உறுப்பினர்கள்‌ பொதுநலன்‌ சார்ந்த விசயங்கள்‌ தொடர்பாக விவாதிப்பதற்காக காலமுறைக்‌ கூட்டமொன்றைக்‌ கூட்டுதல்‌.
  14. ஒரு செயற்குழுவைத்‌ தேர்ந்தெடுப்பதற்கு உறுப்பினர்கள்‌ அதிகாரமளிக்கப்பட்ட உறுப்பினர்களிடையே தேர்தலுக்கு ஏற்பாடு செய்தல்‌.
  15. மேம்பட்ட உறுதித்‌ தன்மை மற்றும்‌ பருவநிலை மாறுபாட்டை தாங்குவதற்கு ஏற்ற வலிமையுடன்‌ கூடிய குடியிருப்புக்களை உருவாக்குவதற்கு தேவையான திறன்‌ வளர்ப்பு பயிற்சியை வழங்குதல்‌ ௨ ள்ளிட்ட மேற்கூறிய அனைத்து நோக்கங்களையும்‌ அடைவதற்கு தேவையான சட்டபூர்வமான செயல்கள்‌, கடமைகள்‌ மற்றும்‌ அத்தகைய பிற விசயங்களை மேற்கொள்ளுதல்‌.