லிப்ட் விதிமுறைகள்

  1. ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் லிப்டில் ஏறக் கூடாது.
  2. பெற்றோர் இல்லாமல் சிறுவர்கள் லிப்டில் தனியாகச் செல்ல அனுமதி இல்லை.
  3. எவ்வகையான போதைப் பொருட்களையும் லிப்டில் பயன்படுத்த அனுமதி இல்லை (புகையிலை / பான்மசாலா / மது உள்ளிட்ட).
  4. எவ்வகையான செல்ல பிராணிகளையும் லிப்டில் ஏற்ற அனுமதி இல்லை.
  5. வீட்டில் சேரும் கழிவுகளை வெளியில் எடுத்துச் செல்லும் போது, அதை லிப்டில் சிந்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் அதனைச் சுத்தம் செய்து தர வேண்டும்.
  6. லிப்டில் வீட்டு உபயோக பொருட்களை எடுத்துச் செல்லும் போது லிப்டின் பாகங்கள் அல்லது சுற்றுப்பக்கங்கள் பாதிக்கப்பட்டால், அதன் முழுப்பொறுப்பும் அந்த நபரே ஏற்று, சரிசெய்து கொடுக்க வேண்டும். (பீரோ / கட்டில் / சோபா உள்ளிட்ட பொருட்களைத் தவிர்ப்பது நலன்)
  7. லிப்ட் மேன் அனுமதிக்க மறுக்கும் பொருட்களை கட்டாயம் ஏற்றக் கூடாது.
  8. லிப்ட் மேன் குறித்து புகார் ஏதும் இருந்தால் ப்ளாக் தற்காலிக தலைவரிடமோ (அறிவழகன் 7373333078) அல்லது CPA/TA விடமோ (மீனா 8682903024) / (கோட்டீஸ்வரன் 96771 82052) தெரிவிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் லிப்ட் மேனிடம் தனிப்பட்ட வகையில் முறையிடவோ, வாக்குவாதத்தில் ஈடுபடவோ கூடாது.
  9. லிப்டில் தண்ணீர் கேன் ஏற்றுவதாக இருந்தால் அதிகபட்சம் 5 கேன்களுக்கு மேல் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.
  10. கட்டுமான கழிவுகள் அல்லது வீட்டு உபயோக பொருட்களை ஏற்றுவதாகவோ அல்லது இறக்குவதாகவோ இருந்தால், கோணிப்பை போன்ற பொருட்களைப் பயன்படுத்தி பாதுகாப்பாக எடுத்துச் செல்ல வேண்டும் (அதிகபட்சம் 5 பை) இதனை லிப்டில் ஏற்றும் போது, லிப்டில் ஏற்படும் சேதங்களுக்கு அந்த நபரே முழு பொறுப்பு ஏற்று அதனைச் சரிசெய்து கொடுக்க வேண்டும்.