TNUHDB118
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் - 118 அடுக்குமாடி குடியிருப்போர் நலச் சங்கம்

பிளாக் - 118, க.எண்: 96, எழில் நகர், பெரும்பாக்கம் - 600 100

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் - 118 அடுக்குமாடி குடியிருப்போர் நலச் சங்கம்

பிளாக் - 118, க.எண்: 96, எழில் நகர், பெரும்பாக்கம் - 600 100


தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் வீடு திட்டம்

வீடு திட்டத்திற்கு விண்ணப்பிக்க நினைக்கிறீர்களா? விண்ணப்பம் எளிதாக நிறைவேற இவ்வாவணங்களைத் தயாராக வைத்திருங்கள்!

சென்னை மாநகரத்தில் அமைந்துள்ள குடிசை பகுதிகள் மற்றும் ஆட்சேபகரமான பகுதியில் அமைந்துள்ள குடிசை பகுதிகள் ஆகிய பகுதிகள் வாரியத்தால் குடிசை பகுதி என பிரகடனம் செய்யப்பட்டது. அப்பகுதியில் வசித்து வரும் குடிசை வாசிகளுக்கும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் சுகாதார வசதியுடன் கூடிய அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

அரசாணை குறிப்பு

வாரிய குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற அரசாணை எண்.10, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் (UHD - 3) துறை, நாள்.25.01.2022 - ன்படி கீழ்க்கண்ட தகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தகுதி விவரங்கள்
  • பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர் என்பதை உறுதி செய்ய குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3,00,000 /-ற்கு குறைவாக இருக்க வேண்டும்.இதற்கான வருவாய்த் துறை சான்று சமர்ப்பிக்க வேண்டும்.
  • குடும்ப உறுப்பினர்கள் எவருக்கும் தங்களது பெயரில் குடியிருப்பு மற்றும் மனைகள் இருக்கக் கூடாது. இதற்கான உறுதி மொழிப்பத்திரம் சமர்ப்பிக்க வேண்டும்.
  • குடிசைப்பகுதி, ஆட்சேபனை உள்ள அரசு புறம்போக்கு நிலங்களான நீர் நிலை, காப்புக் காடுகள், அபாயகரமான பகுதிகளான வெள்ள சேத பகுதிகள், கடலோர பகுதிகள் மற்றும் பேரிடர் ஏற்படும் பகுதிகளில் வசிப்பவர்கள்.
  • சிதலமடைந்த வாரிய குடியிருப்புகளில் வசிப்பவர்கள்
  • சாலையோரத்தில் வசிப்பவர்கள்
  • திட்டப்பணிகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள்

2024 & 2025ம் ஆண்டில் பிளாக் –ல் மேற்கொள்ளப்பட்ட பணிகள்!
  1. பிளாக் 117 முதல் 121 வரை இருந்த தண்ணீர் இணைப்புகளை தலா 3 பிளாக்குகள் வீதம் 2 ஆகப் பிரித்து, தினசரி தண்ணீர் வருவதற்கு பிளாக் நிர்வாகத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
  2. பிளாக் பின்பக்கம் தோண்டப்பட்டிருந்த கால்வாய்கள் ஜேசிபி கொண்டு மூடப்பட்டது.
  3. பிளாக் முன்பக்கம் வாகனங்களை ஏற்ற வசதியாக கான்கீரிட் பாதை அமைக்கப்பட்டது.
  4. மின்சார அறை, லிப்ட் அறை ஆகியவற்றில் பக்கவாட்டுகளிலிருந்த துளைகள் அடைக்கப்பட்டது.
  5. நீண்ட நாட்களாக இயக்கப்படாமல் இருந்த லிப்ட் இயக்கத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
  6. பிளாக்கில் நடந்த தொடர் திருட்டு சம்பவங்களைத் தொடர்ந்து பையோ மெட்ரிக் கேட் பொருத்தப்பட்டது.
  7. திருடுபோன வீடுகளுக்கு மின் ஒயர்களை மீண்டும் மின் ஒயரிங் செய்து கொடுக்க துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டு, காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
  8. பிளாக் சுற்றி இருந்த ஜல்லி கற்களை அகற்றித் தூய்மைப்படுத்தப்பட்டது.
  9. ஒவ்வொரு தளங்களிலும் உள்ள கேபிள் டிவி ஒயர்கள் ஒழுங்குபடுத்தப்பட்டது.
  10. ஒவ்வொரு தளங்களிலும் முறையில்லாமல் கட்டப்பட்டிருந்த துணி காயவைக்கும் கயிறுகள் ஒழுங்குபடுத்தப்பட்டது.
  11. கேபிள் டிவிக்கான பொது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டது.
  12. அலாட்மெண்ட் ஆகாமலிருந்த 50 க்கும் மேற்பட்ட வீடுகளுக்குப் பூட்டு பிளாக் சார்பில் போடப்பட்டது.
  13. திறந்த நிலையிலேயே இருந்த ஓடிஎஸ் கதவுகளுக்குப் பூட்டுப் போடப்பட்டது.
  14. மின் அறை ஒழுங்குபடுத்தப்பட்டு பிளாக் நிர்வாக அலுவலகமாக மாற்றப்பட்டது.
  15. கடந்த தை திருநாள் அன்று பிளாக் சார்பில் பொங்கல் வைக்கப்பட்டது.
  16. காரிடார் பகுதிகளுக்கான மின் சுவிச் ஒட்டுமொத்தமாக ஒரே கட்டுப்பாட்டில் கொண்டுவரத் தனி அமைப்பு உருவாக்கப்பட்டது.
  17. பிளாக் பின்பக்கம் உள்ள கழிவு நீர்த் தொட்டி, உடைந்த நிலையில் அவை சரி செய்யப்பட்டது. (தற்போது மீண்டும் உடைந்துள்ளது).
  18. ஒடிஎஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள ஓதங்களைப் போக்க துறையில் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
  19. பிளாகிற்கான ஜெனரேட்டர் கோரி கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
  20. 4,5,6,7 தளங்களுக்கு காரிடர் லைன் வழங்கக் கோரி துறையில் கடிதம் வழங்கப்பட்டு, ஒயரிங் செய்யப்பட்டது.
  21. பிளாக் படிக்கட்டுகளின் கீழ் வைக்கப்பட்டிருந்த தேவையில்லாத குப்பைகளை அகற்றித் தூய்மைப்படுத்தப்பட்டது.
  22. கிரயப் பத்திரம் பெறுவதற்காக துறையில் பேசி, நமது அலுவலகத்திலிருந்தே நம் மக்களுக்கு உதவும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
  23. புதியதாக அலாட்மெண்ட் பெற்று வருபவர்களுக்கு பிளாக் விதிமுறைகளை எடுத்துக் கூறி, அவர்களுக்குத் தேவையான டாக்குமெண்ட் பணிகளுக்கு பிளாக் நிர்வாகத்தின் சார்பில் உதவி மேற்கொள்ளப்பட்டது.
  24. பிளாக் பாதுகாப்பிற்காக 16 சிசிடிவி கேமரா அமைக்கப்பட்டது.
  25. மின்சாரம் இல்லாத நேரத்திலும் பையோமெட்ரிக் வாசல், மற்றும் சிசிடிவி கேமரா இயங்கும் வகையில், வைப்பை மற்றும் இன்வெட்டர் வைக்கப்பட்டது.
  26. பிளாக் முன்பக்கத்தில் கூடுதல் பைக் பார்க்கிங் அமைக்க முதற்கட்டமாக பைப்புகள் புதைக்கப்பட்டு கம்பி வேலி அமைக்கப்பட்டது.
  27. தளம் 5ல் ஓடிஎஸ் கதவு உடைந்திருந்த நிலையில், பாதுகாப்பு கருதி வெல்ட் செய்யப்பட்டது.
  28. லிப்ட் மேன்கள் அத்தியாவசிய வசதிகளுடன் செயல்படும் வகையில் பேன், டேபிள், நாற்காலி வாங்கி கொடுக்கப்பட்டது.
  29. பிளாக் சாராத நபர்கள் மற்றும் ப்ளாக்கில் ஏற்பட்ட பிரச்சனைகள் பிளாக் சார்பில் எதிர்கொண்டு, சட்ட ரீதியான மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
  30. துறையிலிருந்து ப்ளாகிற்கு வந்து சேர வேண்டிய அனைத்து வசதிகளும் பெற, தொடர்ந்து பிளாக் நிர்வாகத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

2026ம் ஆண்டில் பிளாக்–ல் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள பணிகள்!
  1. பிளாக் 117 & 118 – க்கான ஜெனரேட்டரை பெறுதல். (அரசுக்கு வலியுறுத்தல்)
  2. ஓடிஎஸ் மற்றும் மழைநீர் வெளியேறும் பைப்புகளை சுற்றி ஏற்பட்டுள்ள ஓதங்களைப் போக்க, மொட்டை மாடியில் தண்ணீர் தேங்காதபடி கெமிக்கல் கோட்டிங் மேற்கொள்ள வழிவகை. (அரசுக்கு வலியுறுத்தல்)
  3. பிளாக் வலது மற்றும் இடது பக்கங்களில் வாகனங்களை நிறுத்த தேவையான வசதிகளை அமைத்தல் – மண் கொட்டி சமதள பரப்பை ஏற்படுத்துவதும், கான்கிரீட் தளம் அமைத்தல்.
  4. பிளாக் உள் மற்றும் வெளிப்பகுதிகளில் 15 நாட்களுக்கு ஒருமுறை கிருமி நாசினி மற்றும் கொசு மருந்து தெளிக்க நடவடிக்கை.
  5. உடைந்துள்ள படிக்கட்டுகளைச் சரி செய்ய வழிவகை. (அரசுக்கு வலியுறுத்தல்)
  6. பிளாக் சங்க பதிவுச் சான்றிதழ் பெறக் கோரிக்கை. (அரசுக்கு வலியுறுத்தல்)
  7. பிளாக் பெயர்ப் பலகை அமைத்தல்.
  8. பிளாக் பின் பக்கத்தில் பொருத்தப்படாமல் உள்ள ஸ்டீட் விளக்குகளைப் பொருத்த நடவடிக்கை.
  9. பாம்பு, பூச்சி போன்றவை ப்ளாக் உள்ளே நுழையா வண்ணம், பிளாக் முன்பக்க கதவுகளைத் தவிர்த்து, மீதமுள்ள 3 கதவுகளுக்கு 2 அடி உயரத்தில் தகர சீட் அமைக்க நடவடிக்கை.
  10. அரசு சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள தீயணைப்பு பைப்புகளுக்கு இணைப்பு வழங்க நடவடிக்கை. (அரசுக்கு வலியுறுத்தல்)
  11. குறைந்த விலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்க நடவடிக்கை.
  12. மொபைல் சிக்னல் அனைத்து வீடுகளுக்கும் கிடைக்கும் வகையில், தேவையான கருவிகளைப் பொருத்த நடவடிக்கை.
  13. அனைத்து வீடுகளுக்கும் காலிங் பெல் பொருத்த நடவடிக்கை.
  14. ப்ளாக் முன் மற்றும் பின் பக்கங்களில் உள்ள கழிவுநீர் தொட்டிகளின் மூடிகளை மாற்ற நடவடிக்கை. (அரசுக்கு வலியுறுத்தல்)
  15. லிப்ட் உள் பக்கத்தில் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை.
  16. சேதமடைந்துள்ள கழிவுநீர் மற்றும் மழைநீர் பைப்புகளைச் சரி செய்யக் கோரிக்கை. (அரசுக்கு வலியுறுத்தல்)
  17. ப்ளாக் உள் பகுதிகளில் ஒரே மாதிரியான வண்ணப்பூச்சு செய்ய நடவடிக்கை.
  18. அனைத்து தரை தளங்களிலும் ரசாயன வண்ணப்பூச்சு செய்ய நடவடிக்கை.
  19. தினசரி விநியோகிக்கப்படும் குடிநீருக்கான நேரத்தை முன்கூட்டியே தெரிவிக்கக் கோரிக்கை. (அரசுக்கு வலியுறுத்தல்)
  20. மின் அறைகளுக்கு எர்த் ராட் மற்றும் லிப்ட் மீட்டரை கேபின் பாக்கிஸில் பொருத்த நடவடிக்கை. (அரசுக்கு வலியுறுத்தல்)
விண்ணப்பம்
அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீடு – விண்ணப்ப படிவம்

*(விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது)*